Date:

ரின் மீன் விலை அதிகரிக்கலாம்

சந்தையில் ரின் மீன் (பெரிய செமன் ரின்) ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதுவரை ஒரு பெரிய செமன் ரின்னின் விலை 450 முதல் 500 ரூபா வரை காணப்பட்டது.

அத்தோடு முட்டை, இறைச்சி, கருவாடு மற்றும் காய்கறிகளின் விலை உயர்வால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

பல கடைகளில் முட்டை விலை 48 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ கோழிக்கறியின் விலை 1250 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அனைத்து வகையான கருவாடுகளின் விலையும் ஏறக்குறைய இரு மடங்காக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரின் மீன் விலை உயர்வு குறித்து நாம் வினவியபோது, ​​ரின் மீன் விநியோக நிறுவனமொன்றின் தலைவர் ஒருவர் கூறுகையில், அனைத்துச் செலவுகளும் அதிகரித்துள்ளதால் பெரிய செமன் ரின் ஒன்றின் விலை 750 ரூபா வரையில் அதிகரிக்கலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...