சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இன்று முதல் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று முதல் 800 மெட்ரிக் டன் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் இந்த தொகையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.