எயார்பஸ் விசாரணையில் நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணச்சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் பணச்சலவைச் சட்டத்தின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான விபரங்களை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, கடந்த செப்டெம்பர் 04 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அந்த ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜினாமா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.   இந்த ராஜினாமா...

பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அபாயம்!

பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக முன் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.   இந்த அறிவித்தல் இன்று (14) மு.ப....