Date:

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது

நாவலப்பிட்டி நகரில் மிக நீண்ட காலமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி பொலிஸார், கம்பளை பொலிஸார் மற்றும் கம்பளை போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையிலேயே குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதில் பிரதான சந்தேகநபர் ஒருவரும் ஏனைய 11 பேரும் போதை விற்பனை பிரதிநிதிகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைது செய்தபோது, அவர்களிடமிருந்து 2880 மில்லிகிராம் ஹெரோயின், 560 மில்லிகிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29 – 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் நாவலப்பிட்டி, ஓவிட்ட, ஆகரஓயா, ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேநபர்கள் நேற்றைய தினம் (5) நாவலப்பிட்டி பதில் நீதவான் சுனெத்ரா கொட்டவலகெதர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...