Date:

புத்தளத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிப்பு.

புத்தளத்தில் சமூக சேவையில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் தேசகீர்த்தி விருது வழங்கி நேற்று(04) கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையினால் இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் புத்தளம் மாவட்ட விசேட ஒன்னுகூடல் இன்று புத்தளம் ICE TALK மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போதே குறித்த ஒன்பது பேரும் கௌரவிக்கப்பட்டனர்.

பேரவையின் தலைவர் எம்.எஸ்.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் தேசிய பணிப்பாளர் பஹத் ஏ மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், பேரவையின் அங்கத்தவர்களான சமாதான நீதவான்களும் கலந்துகொண்டனர்.

 

இதன்போது புத்தளத்தில் அரசியல், சமூக சேவை மற்றும் ஊடகத்துறையில் பிரகாசிக்கும் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் ” தேசகீர்த்தி ” பட்டம் வழங்கி பிரதம அதிதியால் கௌரவிக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர்களான ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ.காசிம் மற்றும் ஆர்.எம்.சப்ராஸ் ஆகியோர் மூன்று ஊடகவியலாளர்களே இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் எதிர்கால செயற்பாடுகள் பற்றியும் இந்த ஒன்றுகூடலில் கலந்துரையாடப்பட்டதுடன், ஒன்றுகூடலுக்கு வருகை தந்த சமாதான நீதிவான்களுக்கும் சான்றிதழ்களும் பிரதம அதிதியால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...

யானையிடம் இருந்து தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35...