Date:

ஐந்து நாட்களும் ஆசிரியர்களை அழைப்பது சாத்தியமில்லை

தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதென்பது பெரும் நெருக்கடியான விடயம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.

இதனை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவது தொடர்பாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளோம்.”

அந்த கடிதத்தில், “தற்போதைய நெருக்கடியில் ஆசிரியர்கள் ஐந்து நாட்களும் பயணம் செய்து கற்பித்தல் பணியில் ஈடுபடுவது முடியாத காரியமாகும். நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தபடியே உள்ளன.

இந்நிலையில் ஒவ்வொரு நாளும் பயணம் செய்வதால் உழைப்பின் முழுத் தொகையையும் போக்குவரத்திற்கு செலவழிக்க வேண்டியுள்ளது. ஆசிரியர்களை முழு நாட்களும் அழைப்பதெனில் அவர்களின் போக்குவரத்து செலவீனத்தில் அரைப்பங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மற்றைய திணைக்களங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு ஒத்ததாக பாடசாலைகளை இயக்குவதே சிறந்த வழியாகும்.

ஆசிரியர்களின் பாடநேரங்களை அதிகரித்து அவர்களை சுழற்சி முறையில் அழைப்பதே பொருத்தமானது. இதனை தாங்கள் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

மேலும், இந்த நடைமுறையானது பாடசாலை அதிபரின் நிர்வாக நடைமுறைக்கு உட்பட்டதாக நெகிழ்ச்சிப் போக்குடையதாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...