Date:

வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சையில்

பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளை பொது வைத்தியசாலையில் 15 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர் ஒருவரின் உறவினர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

71 வயதான நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையை அடுத்து, அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக 3 பேர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், பதுளை வைத்தியசாலை 15 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் வைத்தியர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் இணைந்து பதாதைகளை ஏந்தி சந்தேக நபர்களுக்கு தண்டனை வழங்குமாறு கோஷங்களை எழுப்பியவாறு வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...