Date:

ரயில் விபத்தில் இரண்டு காட்டுயானைகள் பலி

ஹபரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 120 ஆம் கட்டை – தல்பந்தகந்தை பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு காட்டுயானைகள் உயிரிழந்தன.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற தொடருந்து ஒன்றுடன் காட்டுயானைகள் நேற்றிரவு மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் மற்றுமொரு யானை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து காரணமாக கொழும்பு – ஹபரனைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹபரனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக...

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று...

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...