Date:

யாழில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் பலி

யாழ். வடமராட்சி – குஞ்சர்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

யாழ். வடமராட்சி, கரவெட்டி குஞ்சர் கடை கண்டான் வீதியில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவனுக்கு முன்னால் மாடு ஒன்று குறுக்காகச் சென்றுள்ளது.

இதனால் பதற்றமடைந்த மாணவன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் காயமடைந்த மாணவனை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் தற்போது விசாரணைகளுக்காகவும், உடற்கூற்றுப் பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் மண்டான் – கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் தற்போது நடைபெற்ற க.பொ.த. சாதாரணதர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தென்னகோன் கைது

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்களைத் தாக்கியவர்களுக்கு உதவிய...

யாழ். பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம் (21) விசேட விடுமுறையினை...

திடீர் போராட்டத்தை ஆரம்பித்த நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள்

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் நாளை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த...