கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமகேவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், இவர் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.