வவுனியாவைச் சேர்ந்த 15, 16 வயதுகளுடைய நான்கு மாணவர்கள் இன்று மாலை ஈரட்டைபெரியகுளத்திற்கு நீராடச் சென்ற வேளை நால்சரும் நீரிழ் மூழ்கியுள்ளனர்.
இதன் போது இவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டடு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பிரதேசவாசிகளுடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மற்ற இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.