வவுனியா – குருமன்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 31ஆம் திகதி அதிகாலை முதல் அவர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
20 வயதான குறித்த இளைஞர், பல மணிநேரமாகியும் வீடு திரும்பாததையடுத்து அது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.