Date:

காலி முகத்திடல் வன்முறை: ஜொன்ஸ்டன், மஹிந்த சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டனர்?

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் மஹிந்த கஹந்தகம உட்பட 4 பேர் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குறித்த நபர்கள் சந்தேக நபர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க மற்றும் 11 சந்தேகநபர்களும் ஜூன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...