Date:

வவுனியா மாணவி உயிரிழந்தமைக்கான காரணம் பிரேத பரிசோதனையில் வௌியானது

வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி ராசேந்திரன் யதுர்சி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (01) முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பதும் பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

கணேசபுரம் 08 ஆம் ஒழுங்கையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 16 வயது மாணவி ராசேந்திரன் யதுர்சி நேற்று முன்தினம் இரவு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலை மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவி வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது மாணவியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...