Date:

மஹிந்தவை இன்று  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்காதிருப்பதற்கு தீர்மானம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ அமைதிப் போராட்டங்களின் மீது கடந்த 09ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக இன்று வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்பின்னர், விசாரணைகளுக்காக மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...