தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை அதிகரித்துள்ளதன் காரணமாக பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் இடைக்கிடையே பலத்த மழை பெய்யக்கூடுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சிவப்பு அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்பதுடன், 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று 08.30 க்கு முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் காலி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி, காலி மா வட்டத்தின் யக்கலமுல்ல பகுதியில் 192 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் மீகஹாதென்ன பகுதியில் 132 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும், கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 130 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும், அவிஸ்சாவெல்ல பகுதியில் 121 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல்தாக்கம், மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது.
மேலும், மலைப்பாங்கான பிரதேசங்களில் வீதிகளில் பயணிப்போர் மற்றும் வா கன சாரதிகளை அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இந்த நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, இரத்தினபுரி, எலபாத்த, குறுவிட்ட மற்றும் எஹெலியகொடை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்புநிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியுள்ள, பெல்மடுல்ல, அயகம மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்சிங்கள, வலக்காபொல, கேகாலை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
அத்துடன், மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை மற்றும் பாதுக்க ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேச செயலக பிரிவுக்கும், நுவரெலிய மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்கும், மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காலி மாவட்டத்தின் நாகொடை, பத்தேகம மற்றும் யக்கலமுல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, புளத்சிங்கள வலல்லாவிட்ட மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, தெரணியகல மற்றும் றுவன்வெல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட, அத்துரெலிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கொடக்கவெல, கஹவத்த, ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களை மிகுந்த அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது.
மேலும், மண்மேடு சரிதல், கற்பாறைகள் சரிதல், நிலம் தாழ் இறங்குதல், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் சரிந்து வீழ்தல் உள்ளிட்ட அனர்த்தங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.
மேலும், மண்சரிவு தொடர்பில் ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்க்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மழையுடனான வானிலைக்காரணமாக களு கங்கை, நிலவளா கங்கை மற்றும் அத்தனகளு ஓயா ஆகியன பெருக்கெடுத்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, அடுத்துவரும் 24 மணித்தியாலத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், களு கங்கையை அண்மித்த பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குறுவிட்ட, எலபாத்த, பாலிந்தநுவர மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
அத்துடன், நில்வளா சங்கையை அண்மித்த பஸ்கொடை, கொடபொல, பிடபெத்தர, அகுரெஸ்ஸ, அதுரெலிய, மாலிம்பட, திஹகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இதேவேளை, அத்தனகலு ஓயாவை அண்மித்த கம்பஹா, அத்தனகல்ல, மீரிகம, ஜா-எல்ல மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.
இதேவேளை, கண்டி பொல்கொல்ல நீர்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மஹாவலி கங்கையை அண்மித்த பகுதியில் வாழும் மக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குகுளே கங்கையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சில பிரதேசங்கள் நீரிழ் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.