மூன்று கட்டங்களாக வரிகளை அதிகரிப்பதற்கான திட்டத்தை பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, சில வரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதுடன், மேலும் சில வரிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் இருந்தும் அடுத்த வருடம் ஏப்ரல் மாத்தில் இருந்தும் அதிகரிக்கப்படவுள்ளன.
உடன் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) 8 வீதத்தில் இருந்து 12% வரையும் தொலைத்தொடர்புகள் வரி 11.25 வீதத்தில் இருந்து 15% வரையும் அதிகரிக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
தனிநபர் வருமான வரியும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
வருமான வரி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.