Date:

தந்தை, மகள் சடலமாக மீட்பு

களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நேற்று (30) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

களுத்துறை, ஹீனடியங்கல சிசில உயன பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க சுனில் ஜயசிங்க மற்றும் அவரது 33 வயது மகள் சசித்ரா ஹன்சமலி ஜயசிங்க ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலும், மகள் அறையின் தரையில் சடலமாக கிடந்ததாகவும் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...