இன்றும் (29) டீசலுடனான கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் இரண்டு வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று (28) தெரிவித்திருந்தார்.
இதேவேளை, மீண்டும் உற்பத்தியை ஆரம்பித்துள்ள சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நாளை (30) முதல் எரிபொருளை வெளியிட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.