Date:

திருடன் என நினைத்து விரட்டிச் சென்ற நபர் ஆற்றில் குதித்து பலி

திருடன் என நினைத்து பிரதேசவாசிகள் விரட்டிச் சென்ற நபர் ஒருவர், காலி கொஸ்கொட ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த நபர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் சுமார் 28 வயது மதிக்கத்தக்கவர் எனவும் கொஸ்கொட பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்த நபர் வைத்திருந்த பை ஒன்றில் இரண்டு திருப்புளிகள்(screwdriver) இருந்துள்ளன. இந்த நபரை சிலர் விரட்டி வந்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் ஆற்றில் குதித்துள்ளார்.

ஆற்றில் குதித்த நபர் காணாமல் போன நிலையில், கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா!

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த...

தவெக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க தடை

விஜய் தவிர வேறு புகைப்​படங்​களை பயன்​படுத்​தி​னால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும், கட்சி...