Date:

ஊடகங்களில் வெளியான செய்தியை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் நிராகரித்துள்ளார்

நாடு முழுவதும் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றாலும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகத்தை நிறுத்தி வைக்கவில்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவரும் தனக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் தற்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே எரிசக்தி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மேலதிகமாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படுகின்ற மோதல் நிலைமையை தவிர்ப்பதற்காக இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அனுராதபுரத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் வீட்டின் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவரது வீட்டை தாக்குவதால் எரிபொருள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாக செயற்பாடாகும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மின்வெட்டு இன்றி மின்சாரத்தை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதன்போது குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...