நாட்டின் தற்போதைய நிலையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துதல் மற்றும் முதலீட்டாளரைப் பாதுகாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்
ஆடைத் தொழிற்சாலை பிரதானிகள் குழுவினருடன் முதலீட்டுச் சபையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதனை விடுத்து அதிகாரத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கி அடிபணியும் பட்சத்தில் நாடு பாதிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் டொலர்களை கொண்டு வருவதற்கு நாட்டின் அரசியல் நிலைமை ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.