தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்,
“இன்றைக்கோ நாளைக்கோ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகக் கூடிய சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவர்களுக்கு ஒட்சிசன் கொடுத்துக் காப்பாற்றுகின்ற வகையில் செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.