Date:

இப்போதும் நான் பிரதமராக பதவியேற்க தயார்

பிரதமராக பதவியேற்க தான் தற்போதும் தயாராக இருப்பதாகத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அதிகாரத்துக்காக ஒருபோதும் கொள்கைகளை காட்டிக் கொடுக்க மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில்   ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அங்கு அவர் மேலும் கூறியதாவது: பொறுப்பை ஏற்க முடியாது என்று தான் ஒருபோதும் கூறவில்லை நேர்மையான அமைச்சரவையை ஸ்தாபிக்க தனது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தயாராக உள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு ஏற்றவகையில் எம்மிடமுள்ள வினைத்திறன்மிக்க செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் வந்துள்ளது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நேரடியான தீர்வைப் பெற்றுத்தரக் கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தயாராகவுள்ளோம்.  அதற்குத் தகுதிவாய்ந்த திறமையான குழு எம்மிடம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...