2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் தகவல்களை மறைத்தமைக்காக சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம் தாக்குதல்களில் ஈடுபட்ட இரண்டு தற்கொலைத் தாக்குதல்தாரிகளின் தந்தையாவார்.
33 வயதான செப்பு தொழிற்சாலை உரிமையாளர் இன்ஷாப் இப்ராஹிம், ஈஸ்டர் தாக்குதலின் போது ஆடம்பரமான ஷங்ரிலா ஹோட்டலின் பரபரப்பான காலை உணவு பஃபேயில் தனது வெடிமருந்தை வெடிக்கச் செய்தார்.
அவரது இளைய சகோதரர் இல்ஹாம் இப்ராஹிம் ஒரு குண்டை வெடிக்கச் செய்தார், அன்றைய தினம் போலீசார் குடும்ப வீட்டை சோதனை செய்ய சென்றபோது அது அவர், அவரது மனைவி மற்றும் தம்பதியரின் மூன்று குழந்தைகளுடன் வெடிக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.