இன்றைய தினமும்(25) மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதியே இரவு வேளையில் மின்வெட்டை அமுல்படுத்தாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்று(25) அதிகாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரையான காலப்பகுதியில் 2 மணி 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.