முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்,
நாட்டில் கடந்த 9ஆம் திகதி அலரி மாளிகை முன்பாகவும் காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.