Date:

வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த ஆண் ஒருவர் தற்கொலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த ஆண் ஒருவர் வைத்தியசாலை விடுதி மலசல கூட ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்றிரவு (22) இரவு இடம்பெற்றுள்ளது.

வவுணதீவு நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சிவலிங்கம் தட்சணாமூர்த்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார்.இது தொடர்பில் தெரியவருவதாவது,

தற்கொலை செய்துகொண்டவர் ஒரு மனநோயாளி எனவும். சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு (22) விடுதியில் உள்ள நோயாளிகளை வைத்தியர் பார்வையிட்டு சென்றதன் பின்னர் குறித்த நபர் மலசலம் கழிப்பதற்காக சென்றுள்ளார்.

பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததையடுத்து அவருக்கு உதவியாக இருந்த உறவினர் கதவை திறந்தபோது மலசல கூட ஜன்னல் கம்பியில் அணிந்திருந்த சாரத்தை பயன்படுத்தி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...

சி.ஐ.டிக்கு சென்ற தயாசிறி ஜயசேகர

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத்...

ஸ்பா – மூன்று பொலிஸார் இடைநீக்கம்

மாத்தறையின் வல்கம பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மசாஜ் நிலையத்திற்கு (ஸ்பா)...