பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த குழந்தையொன்று வீதிக்கு அருகாமையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியில் மோதி உயிரிழந்த சம்பவம் மாவனெல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த குழந்தை திடீரென ஜன்னலுக்கு வெளியில் தலையை நீட்டி எட்டிப் பார்த்துள்ளது. இந்த தருணத்தில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த குழந்தை மாவனெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனல்லை – ரம்புக்கனை வீதியில் கிரிகல சந்திக்கு அருகில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மூன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.