நாட்டில் எரிபொருள் கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, பேஸ்லைன் வீதி-ஒருகொடவத்தை சந்தி தற்சமயம் முடக்கப்பட்டுள்ளது.
மேலும், காலி வீதியின் ஹிக்கடுவ பகுதியிலும் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.
இதேவேளை, எரிபொருள் கிடைக்காததன் காரணமாக பொரளை-கொட்டா வீதிப் பகுதியிலும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.