வாகனங்களில் உள்ள எரிபொருள் கொள்கலன்களுக்கு மாத்திரம் பெற்றோல் விநியோகிக்கப்படுமென லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்கலன்கள் மற்றும் போத்தல்களில் பெற்றோல் வழங்கப்பட மாட்டாது என குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொது மக்களின் சொத்துகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.