பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆவணங்களை வழங்க பயன்படுத்தப்பட்ட லங்கா அரசாங்க வலையமைப்பு (LNG) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக திணைக்களம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் (ICTA) இப்பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கணினி செயலிழப்பு காரணமாக தேவையான சான்றிதழ்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பதிவாளர் நாயகம் திணைக்களம் வருத்தம் தெரிவித்துள்ளது.