Date:

4 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம்!

கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, ஷான் பிரதீப் மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய எட்டு சந்தேக நபர்கள் இன்று (19) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மொரட்டுவை மாநகர முதல்வர் சமன் லால் பெர்னாண்டோ மற்றும் டான் பிரியசாத் உள்ளிட்ட எட்டு சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (18) கைது செய்யப்பட்டதுடன், இன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், மேற்படி வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...