Date:

மே.09 போராட்டத்தில் நவ சிங்களே அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் கைது 

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் அலரிமாளிகைக்கு அருகாமையில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) விசுவாசியான நவ சிங்களே அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் கைது    செய்யப்பட்டுள்ளார்.

 

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) டான் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்ததைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசுவாசிகள் பலரிடையே அவர் காணப்பட்டார்.

 

இதேவேளை, தாக்குதல்கள் தொடர்பாக டான் பிரியசாத்துடன் மொரட்டுவ மேயர் சமன் லால் பெர்னாண்டோ, சீதாவகபுர பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன மற்றும் களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள பிரசன்ன ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க, டான் பிரியசாத் உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விசுவாசிகளை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்ததை அடுத்து, போதிய சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டதை அடுத்து இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் நேற்று 10 மணித்தியாலங்களுக்கு மேல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள்...

நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.

நாவலப்பிட்டி அல் - ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு ரவூப் ஹக்கீமின் தொடர்...