Date:

முன்னாள் பிரதமர் பதவி விலகியதன் பின் நாடாளுமன்ற அமர்வில் இன்று

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் அவரது மகன் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் இன்று புதன்கிழமை (18) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார்.

 

நேற்று செவ்வாய்க்கிழமை (17) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணையை விவாதிப்பதற்கான நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவதற்கான பிரேரணை வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​ இருவரும் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

 

புதிய பிரதமரும் அரசாங்கத்துடன் இணைந்து வாக்களித்ததன் மூலம் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

 

மே மாதம் 11 ஆம் திகதி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்காலிகமாக திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு மாற்றப்பட்டதை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன உறுதிப்படுத்தினார்.

 

“அவர் அங்கே நிரந்தரமாக வாழமாட்டார். இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு, அவர் விரும்பிய குடியிருப்பு அல்லது இருப்பிடத்திற்கு மாற்றப்படுவார்,” என்றார்.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிருடன் இருக்கும் வரை பாதுகாக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரயில் ஓட்டுநர்கள், தொழிற்சங்க நடவடிக்கை

இஸ்ரேலிய நிறுவனத்தின் தலைமைத் தளபதி, அந்நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென்...

ரயில் ஓட்டுநர்கள், தொழிற்சங்க நடவடிக்கை

ரயில்வே வண்ண சமிக்ஞை அமைப்பில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படாவிட்டால், எதிர்வரும்...

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – புதிய மாணவர் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

ரயில்வே வண்ண சமிக்ஞை அமைப்பில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படாவிட்டால், எதிர்வரும்...

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – புதிய மாணவர் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

2025/2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை (முஸ்லிம் ஆண்) தெரிவு செய்வதற்கான நேர்முக...