மே மாதம் 9ஆம் திகதி மனிதப் பேரழிவை உருவாக்குவதே அரசாங்கத்தின் சில உறுப்பினர்களின் திட்டம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று தெரிவித்துள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், நாட்டில் மனிதப் பேரழிவை உருவாக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக காலி முகத்திடலுக்குச் செல்லும் கும்பலைக் கலைக்க, நீர்த்தாரைப் பிரயோகம் செய்வதற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தயார் என வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
காலி முகத்திடலுக்குச் செல்லும் ஆளும் கட்சி ஆதரவாளர்களை கலைக்குமாறு தென்னகோன் ஜனாதிபதியிடமிருந்து உத்தரவு பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க வேண்டாம் என்று தென்னகோனுக்கு வேறு உத்தரவுகள் கிடைத்ததாக அவர் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இரு சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“கபுடா” என்பதும் உள்நோக்கத்துடன் நாட்டிற்கு தீ வைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச கூறினார்.