Date:

டயகம சிறுமி விவகாரம்: தமிழ் முற்போக்கு கூட்டணி முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி காவல்துறையில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார் மற்றும் உதய குமார் ஆகியோர் கொழும்பு சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை நேரடியாக சந்தித்து இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மேலும் 3 பேருக்கு இடையிலான தொலைப்பேசி உரையாடல் தொடர்பான தரவுகளையும், சிறுமியை ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணிக்கு அமர்த்திய முகவரின் வங்கி பணப்பரிமாற்ற விபரங்களையும் பொரளை காவல்துறைக்கு வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயது சிறுமி தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

பொரளை காவல்துறையினருடன், கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவும் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

சிறுமியை கடந்த வருடம் டயகம பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு அழைத்துச் சென்ற நபரிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தாய் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியினது தந்தை ஆகியோரிடம் மேலதிக வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கடந்த தினம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தார்.

இதேவேளை, இந்த சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் தனியொருவரால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாய்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த...

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு நோட்டீஸ்

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக...

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர்...

பாட்டளிக்கு சிஐடி அழைப்பு

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க...