நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு அமைச்சு பதவிகளையும் ஏற்காமல் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளது.
பிரதமருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விரைவில் இடைக்கால வரவு-செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.