கடந்த சில நாட்களில் ஏற்பட்ட கலவரங்களில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தனது அதிகாரபூர்வ பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களின் தொடர்பில பதிவொன்றை இட்டுள்ளார்.
“இந்த துயரமான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், இதுவரை நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து வருத்தமடைகிறேன். வன்முறையை தடுத்து நாட்டில் அமைதியான சூழலை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்” எனப் பதிவிட்டுள்ளார்.