ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் அபாயம் காணப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பராக இருந்தால் சஜித் அணியை சேர்ந்த ஹரீன் பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவொன்று அரசாங்கத்தின் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த குழுவொன்று எதிர்க்கட்சி பக்கம் செல்ல திட்டமிட்டுள்ளன.
இவ்வாறு நடக்குமாக இருந்தால் பொதுஜன பெரமுனவினர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கும் வாய்ப்புள்ளது.
இதன்போது சஜித் பிரேமதாச தரப்பினரால் பெரும்பான்மையை காட்டமுடியாது போகுமாக இருந்தால் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க நேரிடலாம்.
இந்நிலையில் தாமதிக்காது இடைக்கால அரசாங்கத்துடன் இணைந்து சஜித் பிரேமதாசவை பிரதமராக்க வேண்டும் அவரின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.