பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் குழு சார்பில் பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னதாக தெரிவித்திருந்தது.
புதிய பிரதமர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.