Date:

அரசியல்வாதிகளின் சொத்துக்கள் பொதுமக்களால் சேதம்

குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீடு தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஆத்திரமடைந்த குருநாகல் மக்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 

இந்த தாக்குதலில் மேயரின் வீடு பலத்த சேதமடைந்தது.

 

குருநாகல் போதனா வைத்தியசாலை, அரச வங்கிகள், குருநாகல் மாவட்ட செயலகம், மாகாண சபை உள்ளிட்ட நிறுவனங்களின் 4,000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று (மே 9) குருநாகல் “gota go gama” போராட்ட தளத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச அரசியல்வாதியான உதேனி அத்துகோரலவின் வீடு பிரதேச மக்களால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது., அவரது வீடும் பலத்த சேதமடைந்தது.

 

இதேவேளை, நாட்டின் பல நகரங்களில் அரசியல்வாதிகளின் கார்கள் பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

 

நிட்டம்புவ, கடவத்தை, மினுவாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் மற்றும் சொகுசு கார்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...