24 ரயில்வே தொழிற்சங்கங்கள் அதிரடி முடிவு!

ரயில்வே திணைக்களத்தின் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

 

ரயில்வே பொது முகாமையாளரின் தன்னிச்சையான நிர்வாகம் காரணமாக ரயில் சேவை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும், இதனால் பயணிகள் தொடர்ச்சியாக அசெளகரியங்களுக்கு உள்ளாவதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும், இந்த நிலைமை தொடர்பில் குரல் எழுப்பும் தொழிற்சங்க அதிகாரிகளை ஒடுக்குவதற்கு எதிராகவும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

இதற்கமைய, ரயில்வே திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

குறைந்தபட்ச எரிபொருள் இருப்பை பேணுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களைப் பேணுவது தொடர்பில் அமைச்சின் செயலாளரினால் ஏற்கனவே உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்...

ஞானசாரவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23...