Date:

பிரதமர் பதவி விலகாவிட்டால் நாங்கள் விலகுவோம் – நான்கு அமைச்சர்கள் அதிரடி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு, தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (09) அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் தனது இராஜினாமாவை அறிவிப்பார் என அரச வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், பெசில் ராஜபக்ஷ இன்று காலை ஆயிரக்கணக்கான பொதுஜன பெரமுன ஆதரவாளர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்துள்ளதுடன், உள்ளூராட்சி பிரதிநிதிகள் குழுவொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தயாராகி வருகிறது. பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவி விலகாவிட்டால் நான்கு அமைச்சர்கள் பதவி விலக உள்ளனர். பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, அலி சப்ரி மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை (09) பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்த நிலையில், சனிக்கிழமை அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...

மனிதநேயமிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி...

ஸ்ரீலங்கன் முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக் குழுவின் விசேட அறிவிப்பு

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும்...