மின்சார வாகனங்களுக்கு விசேட இலக்கத் தகடுகள்

அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிற பின்னணியைக் கொண்ட இலக்கத் தகடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதுவரை பச்சை நிற பின்னணியைக் கொண்ட சுமார் 8,000 இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார்.

 

போக்குவரத்து அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, மின்சார வாகனங்களுக்கு இந்த பச்சை நிற பின்னணியைக் கொண்ட இலக்கத் தகடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக துஷார பெர்னாண்டோ கூறினார்.

 

இது வர்த்தமானியில் வெளியிடுவதற்காக ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்பதை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.   கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை...

தெற்கு அதிவேக வீதியில் சொகுசு கார் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காரொன்று இன்று (07) காலை வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.   தொடங்கொட 32.4...