கொழும்பு 07 ஐந்தாவது ஒழுங்கையில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எனது வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விரும்பினால் சிறிகொத்தாவில் திங்களன்று என்னை சந்திக்கலாம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.