எதிர்வரும் திங்கள் அன்று தனது பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் குறித்த அறிவிப்பினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் பொதுமக்களினால் மேற்கொள்ளும் போராட்டங்களை மேலும் எதிர்கொள்ளமுடியாதுள்ளதாகவும் அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதியிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை தனது பதவியை இராஜினாமா செய்து நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.