Date:

“மஹிந்த சரணம் கச்சாமி” என்று கூறியவர் சாணக்கியன் எம்.பியே- சபையில் ரணில் பதிலடி

தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வன்மையாக கண்டித்துள்ளார்.

நாடாளுமன்றின் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ரணில், நான் ராஜபக்ஷவர்களுடன் இருப்பதாக சாணக்கியன் எம்.பி குறிப்பிட்டார். ஆனால் நான் அவர்களுடன் இருக்கவில்லை, ராஜபக்ஷ பிரபாகரனுடன் சேர்ந்து என்னை தோற்கடித்த நினைத்தார்.

நான் இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் ஒரு விடயத்தை இங்கு தெரிவிக்க வேண்டும். 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் சாணக்கியன் ஆகியோரை சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டாளர்களாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார்.

எனவே, நான் இல்லை மஹிந்த பின்னால் சென்றது, சாணக்கியன் எம்.பியே அவர்கள் பின்னால் சென்றார். அவர்தான் அப்போது “மஹிந்த சரணம் கச்சாமி, பெசில் சரணம் கச்சாமி, நாமல் சரணம் கச்சாமி” என்று அவர்கள் பின்னால் சென்றிருந்தார். எனவே, ஏன் சாணக்கியன் எம்.பி என்னைப் பற்றி இவ்வாறு தெரிவித்தார் என்பது புரியவில்லை- என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...