Date:

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கியொன்று செயலிழந்துள்ளமையினால், அனல் மற்றும் நீர் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.

03 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை அதிகரிக்காமல் இருக்கும் நோக்கில் ஆணைக்குழுவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 270 மெகாவாட் மின்பிறப்பாக்கியொன்று செயலிழந்துள்ளதாக நேற்று(03) அறிவிக்கப்பட்டது.

குறித்த மின்பிறப்பாக்கியை புனரமைப்பதற்கு இன்னும் 5 நாட்கள் செல்லுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

அந்தவகையில், இன்றைய தினம்(04) A முதல் W வரையான வலயங்களில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை 02 மணித்தியாலங்களுக்கும் மாலை 05 மணி முதல் இரவு 09 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக...

இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று...

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...