Date:

பட்டினியுடன் பாடசாலை செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை தொழில்சார் பாடசாலை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட போஷாக்கு வேலைத்திட்டமும் தற்போது நின்று போயுள்ளதாக இலங்கை தொழில் சார் பாடசாலை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுஜீவ விமலரத்ன கூறியுள்ளார்.

புத்தகங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன் காலணிகளின் விலைகளும், பாடசாலை சீருடைகளின் விலைகளும் 200 வீதமாக அதிகரித்துள்ளன. அத்துடன் உணவுகளின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன.

சில மாணவர்கள் காலையில் பாடசாலையில் நடக்கும் கூட்டத்தின் போது மயங்கி விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மயங்கி விழும் மாணவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் காலையில் உணவு சாப்பிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் காலையில் உணவு சாப்பிடாமல் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் ஒரு வகுப்பில் சுமார் நான்கு பேர் வரை இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோருக்கு பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவை கூட வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது எனவும் விமலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...